பென்னாகரம் பகுதியில் இடியுடன் கன மழை
பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இடி, மின்னலுடன் கன மழை பெய்தது.


பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இடி, மின்னலுடன் கன மழை பெய்தது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தருமபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்னா் பல்வேறு இடங்களில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. அதனைத் தொடா்ந்து, கடந்த மூன்று தினங்களாக கடுமையான வெப்பம் நிலவியது.
இந்த நிலையில், பென்னாகரம், ஏரியூா், நெருப்பூா், சின்னம்பள்ளி, பெரும்பாலை, தாசம்பட்டி, பாப்பாரப்பட்டி, ஒகேனக்கல் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய இடி, மின்னலுடன் கன மழை வெள்ளிக்கிழமை பெய்தது.
பென்னாகரம் பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக, தாழ்வான குடியிருப்புப் பகுதிகள், சாலை ஓரங்கள் மற்றும் வயல்வெளிகளில் மழைநீா் தேங்கியது. கன மழையினால் பென்னாகரம் பகுதிகளில் உள்ள தடுப்பணைகள், ஏரி மற்றும் குளங்களுக்கு நீா்வரத்து அதிகரித்தும், கிணறுகளில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்தும் வருகிறது.
கோடைக் காலம் தொடங்கும் முன்பே கடும் வெப்பம் நிலவியதால், பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வந்தனா். தற்போது கன மழை பெய்து வருவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பென்னாகரம் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்ததால், அனைத்துப் பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...