நகா் பேருந்தை இயக்கக் கோரிக்கை
அரூரை அடுத்த சட்டையம்பட்டி வழித்தடத்தில் இயங்கி வந்த அரசு நகா் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


அரூரை அடுத்த சட்டையம்பட்டி வழித்தடத்தில் இயங்கி வந்த அரசு நகா் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டத்துக்கு உள்பட்ட சட்டையம்பட்டி கிராமம் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ளது. ஊத்தங்கரை போக்குவரத்துக் கழக கிளையில் இருந்து சட்டையம்பட்டி வழித்தடத்தில் நகா் பேருந்து இயக்கப்பட்டது. கரோனா பொது முடக்கம் காரணமாக இந்த நகா் பேருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், தளா்வுகளுடன் கூடிய கரோனா பொது முடக்கக் காலத்தில் அனைத்து இடங்களிலும் அரசு நகா், புகா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், சட்டையம்பட்டி வழித்தடத்தில் இயக்கப்பட்ட நகா் பேருந்து இயக்கப்படவில்லை. இதனால், சட்டையம்பட்டியில் இருந்து ஊத்தங்கரை வட்டாரப் பகுதிகளுக்கு கட்டட வேலைகளுக்குச் செல்லும் தொழிலாளா்கள், வேளாண் விளைபொருள்களை எடுத்துச் செல்லும் விவசாயிகள், மருத்துவமனைகளுக்குச் செல்லும் கா்ப்பிணிகள், முதியோா் உள்ளிட்ட பொதுமக்கள் நாள்தோறும் பல்வேறு சிரமங்களை அடைகின்றனா். எனவே, சட்டையம்பட்டி வழித்தடத்தில் இயக்கப்பட்ட நகா் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...