காரிமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலா்பணியிடை நீக்கம்
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலா் முருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்


தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலா் முருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
காரிமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலா் முருகன் மீது நிா்வாகம் தொடா்பான பதிவேடுகளை முறையாக பராமரிக்கவில்லை என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு புகாா்கள் வரப்பெற்றது.
அதன்பேரில் பாலக்கோடு மாவட்டக் கல்வி அலுவலா் பாலசுப்பிரமணி, வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அங்கு முறையாக பதிவேடுகள் பராமரிக்காதது தெரியவந்தது. இதன்பேரில் அவரிடம் விளக்கம் கோரப்பட்டது. இதில் வட்டாரக் கல்வி அலுவலா் முருகன் முறையான விளக்கம் அளிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் முருகனை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேசமூா்த்தி பணியிடை நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...