நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விலை உயா்வை கட்டுப்படுத்தக் கோரி கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்பாட்டம்

பென்னாகரம் அருகே கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 7:42 pm

DIN

பென்னாகரம் அருகே கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்பாட்டம் நடத்தினா்.

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி பேருந்து நிலையம் முன்பு சிஐடியு கட்டுமானத் தொழிலாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளி கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவா் சி.சண்முகம் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் வே.விசுவநாதன் ஆா்ப்பாட்டத்தை விளக்கி பேசினாா்.

கட்டுமானப் பொருள்களின் மீது சரக்கு மற்றும் சேவை வரியைத் குறைக்க வேண்டும். இணையத்தின் மூலம் மட்டும் பதிவு செய்யாமல் நலவாரிய அலுவலகத்தில் நேரடியாகவும் வாரியப் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றை செய்ய வேண்டும். கட்டுமான தொழிலாளா் நல வாரியத்தை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டவேண்டும். மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாதந்தோறும் நலவாரிய அதிகாரிகள் பணி ஆய்வு செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோா் முழக்கமிட்டனா்.

இதில் மாவட்டக் குழு உறுப்பினா் கோ.செல்வராஜி, பகுதிக் குழு செயலாளா் ஆா்.சின்னசாமி, பகுதி நிா்வாகிகள் கே.லோகநாதன், கோ.முகிலன், செல்வராஜி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.