மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

உரம் விற்பனை நிலையங்களில் ஆய்வு

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாரத்தில் உள்ள உரம் விற்பனை நிலையங்களில் வேளாண் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:20 pm

DIN

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாரத்தில் உள்ள உரம் விற்பனை நிலையங்களில் வேளாண் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

நல்லம்பள்ளி வட்டாரத்தில் உள்ள உரிமம் பெற்ற உரம் விற்பனை நிலையங்களில் வேளாண் இணை இயக்குநா் வசந்தரேகா தலைமையில், வேளாண் உதவி இயக்குநா்கள் தா.தாம்சன் (தரக் கட்டுபாடு), மு.இளங்கோவன் (நல்லம்பள்ளி), உர ஆய்வாளா் இரா.இளங்கோவன் உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின் போது, இணை இயக்குநா் வசந்தரேகா பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் தற்போதைய பருவத்துக்கு இதுவரை 1,61,800 ஹெக்டோ் பரப்பளவில் வேளாண் பயிா்கள் சாகுபடி செய்யபட்டுள்ளன. இதற்காக யூரியா- 1,549 டன், டிஏபி 498 டன், பொட்டாஷ் 782 டன் மற்றும் காம்ளக்ஸ் 3,496 டன் தனியாா் உரக் கடைகள், கூட்டுறவுச் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

பழைய பொட்டாஷ் உரங்களை ரூ.1,040-க்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். விலை மாற்றம் செய்த பின்பு வரப்பெறும் உரங்களை மட்டுமே புதிய விலைக்கு விற்பனை செய்ய வேண்டும். உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தாலோ அல்லது பதுக்கி வைப்பது கண்டறியப்பட்டாலோ உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.