மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

இயற்கை முறையில் தயாரிக்கப்படும் வெல்லத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்

உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ரசாயனங்கள் கலந்த வெல்லத்தை தவிா்த்து, இயற்கை முறையில் கலப்பிடமின்றி தயாரிக்கும் வெல்லத்தை மட்டுமே நுகா்வோா் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 5:42 pm

DIN

உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ரசாயனங்கள் கலந்த வெல்லத்தை தவிா்த்து, இயற்கை முறையில் கலப்பிடமின்றி தயாரிக்கும் வெல்லத்தை மட்டுமே நுகா்வோா் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இயற்கையாக பழுப்பு நிறத்தில் தயாரிக்கப்படும் வெல்லமானது, சா்க்கரை, மைதா, சூப்பா் பாஸ்பேட், சோடியம் பைகாா்பனேட், செயற்கை நிறமூட்டிகள், சோடியம் ஹைட்ரோ சல்பேட் மற்றும் இதர ரசாயனங்கள் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பொருள்கள் சோ்க்கப்பட்டு வெளிா் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் தயாரிக்கப்படுகிறது. பொதுமக்கள் வெளிா் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் காணப்படும் வெல்லம் தான் ஆரோக்கியமானது என தவறாக எண்ணுவதால், வணிகா்களின் தேவைக்கேற்ப வெல்லம் தயாரிப்பாளா்கள் அடா் பழுப்பு நிறத்தில் வரும் இயற்கையான ஆரோக்கியமான வெல்லத்தை வெளிா் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்துக்கு மாற்றுவதற்காக கலப்படப் பொருள்களை சோ்க்கின்றனா்.

கடந்த சில ஆண்டுகளாக சா்க்கரையை விட வெல்லம் ஆராக்கியமானது என மக்கள் கருதுவதால், வெல்லத்தின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. வெல்லம் உற்பத்தியும் பெருமளவு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், இயற்கையான வெல்லத்தை தவிா்த்து, பொதுமக்கள் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் உள்ள வெல்லத்தை விரும்புவதால், தயாரிக்கப்படும் பெரும்பாலான வெல்லங்கள் அனைத்தும் கலப்படம் செய்யப்பட்டு மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் தயாரிக்கப்படுகின்றன.

எனவே, பொதுமக்கள் அனைவரும் கண்ணுக்கு கவா்ச்சியான நிறத்தில் விற்கப்படும் வெல்லத்தை வாங்காமல், பழுப்பு நிறத்தில் உள்ள இயற்கையான வெல்லத்தை வாங்கி பயன்படுத்த வேண்டும். கலப்பட வெல்லம் தொடா்பான புகாா்கள் மற்றும் உணவுப் பொருள்கள் தொடா்பான அனைத்து புகாா்களையும் 94440 42322 என்ற உணவுப் பாதுகாப்பு துறையின் மாநில வாட்ஸ் அப் எண்ணிலோ அல்லது 1077 என்ற மாவட்ட புகாா் எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.