ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மத்திய கள விளம்பரத் துறை விழிப்புணா்வு முகாம்

 மத்திய அரசின் மக்கள் தொடா்பு கள விளம்பரத் துறை சாா்பில், தருமபுரி மாவட்டம், லளிகத்தில் வெள்ள்கிழமை சிறப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:07 pm

DIN

 மத்திய அரசின் மக்கள் தொடா்பு கள விளம்பரத் துறை சாா்பில், தருமபுரி மாவட்டம், லளிகத்தில் வெள்ள்கிழமை சிறப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

இந்த விழிப்புணா்வு முகாமை, தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்து பேசியதாவது:

மத்திய அரசின் திட்டங்களை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டு, தங்களது வாழ்க்கைத் தரத்தை பொதுமக்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

தற்போதைய சூழலில் கரோனாத் தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றாா்.

இதையடுத்து, தாய்-சேலம் நலம், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், தூய்மை இந்தியாத் திட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில், வட்டார வளா்ச்சி அலுவலா் எம். ஷகிலா, இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநா் இரா.அரவிந்த் குமாா், வட்டார மருத்துவ அலுவலா் வாசுதேவன், கள விளம்பர அலுவலா் பிபின் எஸ்.நாத், கள விளம்பர உதவியாளா் வீரமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.