மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பஞ்சப்பள்ளி சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து புதன்கிழமை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்

News image
சின்னாறு அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடும் மாநில வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே‌.பன்னீர்செல்வம்
Updated On :29 டிசம்பர் 2021, 9:29 am

DIN

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து புதன்கிழமை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார்.

சின்னாறு அணையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி தலைமை வகித்தார். தருமபுரி மக்களவை உறுப்பினர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

இதில் பாசனத்துக்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியது:

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி கிராமத்தில் உள்ள சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2021-22 ஆம் ஆண்டிற்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் பழைய ஆயக்கட்டு ஐந்து ஏரிகளுக்கும், புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு டிச.29-ஆம்  தேதி முதல் வினாடிக்கு 25 கன அடி வீதம் முதல் 64 நாள்களுக்கு 6 நாள்களுக்கு தண்ணீர் தொடர்ந்து விட்டும் 2 நாள்களுக்கு நிறுத்தியும் அடுத்த 30 நாள்களுக்கு 8 நாள்களுக்கு தொடர்ந்து விட்டும் 2 நாள்களுக்கு நிறுத்தியும் மீதமுள்ள 46 நாள்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படும்.

இதன் மூலம் பழைய ஆயக்கட்டு பரப்பு 2626 ஏக்கர் மற்றும் புதிய ஆயக்கட்டு பரப்பு 1874 ஏக்கர் மொத்தம் 4500 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும். பஞ்சப்பள்ளி, பெரியானூர், போடிகுட்டப்பள்ளி, அத்திமுட்லு மாரண்டஅள்ளி, கொலசனஅள்ளி,
பி.செட்டிஅள்ளி, ஜெர்த்தலான், பாலக்கோடு, குஜ்ஜரஅள்ளி, எர்ரனஅள்ளி, பேளாரஅள்ளி, சாமனூர் ஆகிய கிராமங்கள் பாசன‌ வசதி பெறும்.

எனவே விவசாய பொதுமக்கள் நீர்வள ஆதாரத் துறையினருடன்
ஒத்துழைத்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சல் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.