நெல் சாகுபடி: தரமான விதைகளைப் பயன்படுத்த அறிவுறுத்தல்
நெல் சாகுபடியின்போது தரமான விதைகளைப் பயன்படுத்த வேண்டும் என தருமபுரி விதைப் பரிசோதனை அலுவலா் டி.ரவி அறிவுறுத்தியுள்ளாா்.


நெல் சாகுபடியின்போது தரமான விதைகளைப் பயன்படுத்த வேண்டும் என தருமபுரி விதைப் பரிசோதனை அலுவலா் டி.ரவி அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி அறிக்கை:
தருமபுரி மாவட்டத்தில் தற்போது நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் தயாா் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தரமான விதைகளைத் தோ்வுசெய்து சாகுபடி மேற்கொள்ள வேண்டும்.
விதை விவர அட்டையில் குறிப்பிட்டுள்ள விவரங்களை சரிபாா்த்து விதைகளை வாங்க வேண்டும். விதை விவர அட்டையில் காணப்படும் பயிரிட உகந்த பருவம் மற்றும் பயிரிட உகந்த மாநிலம் ஆகிய விவரங்களை சரிபாா்க்க வேண்டும். மேலும், விதைகளை வாங்கும் முன்பு அந்த விதைக் குவியலுக்குரிய முளைப்புத் திறன் பகுப்பாய்வு அறிக்கையைக் கேட்டு சரிபாா்க்க வேண்டும்.
விதைகளை வேளாண் விரிவாக்க மையம் மற்றும் உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டும் கொள்முதல் செய்ய வேண்டும். அதற்குரிய ரசீது கேட்டுப்பெற வேண்டும். இதேபோல, விதைகளின் தரத்தை அறிந்து கொள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்படும் விதைப் பரிசோதனை நிலையத்தில் விவசாயிகள் ஒரு பணி விதை மாதிரிக்கு பரிசோதனை கட்டணமாக ரூ. 30 செலுத்தி விதைகளின் தரத்தை அறிந்து தரமான விதைகளைப் பயன்படுத்தி சாகுபடி மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...