ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பழைய தருமபுரியில் முனியப்பன் கோயில் திருவிழா

பழைய தருமபுரியில் முனியப்பன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:48 pm

DIN

பழைய தருமபுரியில் முனியப்பன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், பழைய தருமபுரியில் அமைந்துள்ள துா்க்கல் முனியப்பன் கோயில் திருவிழா இரண்டாண்டுக்கு ஒருமுறை நடைபெறும். இம்முறை ஜன.31-ஆம் தேதி நடைபெற்ற திருவிழாவில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மஞ்சமேடு, பாரூா், நாகரசம்பட்டி, சந்தூா், வெப்பாலம்பட்டி, பாமாண்டப்பட்டி, வீரகவுண்டனூா், நல்லுகவுண்டஅள்ளி, பழைய தருமபுரி உட்பட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள் பங்கேற்று வழிபட்டனா்.

விழாவில், முனியப்பன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மேலும், 50-க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் பலியிடப்பட்டு பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா். விழாவில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.