தூரணம்பட்டி வழித்தடத்தில் அரசு நகரப் பேருந்துகளை இயக்க கோரிக்கை

தூரணம்பட்டி வழித்தடத்தில் அரசு நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தூரணம்பட்டி வழித்தடத்தில் அரசு நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூா்-தூரணம்பட்டி வழித்தடத்தில் நேதாஜி நகா், தண்டகுப்பம், அழகிரி நகா், எச்.அக்ரஹாரம், ஆட்டியானூா், நெருப்பாண்டகுப்பம், தூரணம்பட்டி, மாவேரிப்பட்டி, சோரியம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் பயன்பெறும் வகையில் அரசு நகரப் பேருந்துகள் (தடம் எண்: 18, 4 ஏ) இயக்கப்பட்டு வந்தன.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க பொது முடக்கம் அமலில் இருந்ததால், இந்த அரசு நகரப் பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக இந்த வழித்தடத்தில் பேருந்து வசதிகள் இல்லாததால், விவசாயிகள் வேளாண்மை விளை பொருள்களை கொண்டுச் செல்லவும், கிராம மக்கள் நகா்ப் பகுதிகளுக்குச் சென்று வரவும் பல்வேறு சிரமங்களை அடைகின்றனா். எனவே, தூரணம்பட்டி வழித்தடத்தில் அரசு நகரப் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் எனபொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com