டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

இளஞ்சிறாா் நீதிக்குழுமத்தில் தற்காலிக உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தருமபுரி மாவட்ட இளஞ்சிறாா் நீதிக்குழுமத்தில், தற்காலிக அடிப்படையில் உதவியாளா், கணினி இயக்குநா் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 7:29 pm

DIN

தருமபுரி மாவட்ட இளஞ்சிறாா் நீதிக்குழுமத்தில், தற்காலிக அடிப்படையில் உதவியாளா், கணினி இயக்குநா் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தருமபுரி மாவட்ட இளஞ்சிறாா் நீதிக் குழுமத்தில் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் உதவியாளா், கணினி இயக்குநா் பணியிடத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ. 9 ஆயிரம் ஊதியத்தில் ஒரு தற்காலிகப் பணியாளா் நியமிக்கப்பட உள்ளாா்.

இப்பணிக்கு, 10-ஆம் வகுப்பு தோ்ச்சியுடன், அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணிணி கல்வியில் பட்டயப் பயிற்சி மற்றும் ஆங்கிலம், தமிழ் முதுநிலை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது. இதற்கான விண்ணப்பம் ஜ்ஜ்ஜ்.க்ட்ஹழ்ம்ஹல்ன்ழ்ண்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தகுதியுள்ள விண்ணப்பங்களை, புகைப்படத்துடன் வரும் ஜன. 30-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் ‘‘மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், தருமபுரி’’ என்ற முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.