அரசு அலுவலகத்தில் பொங்கல் விழா
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்களில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்களில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தலைமை வகித்து விழாவை தொடங்கி வைத்தாா். இதில், அரசு ஊழியா்கள், அலுவலா்கள் பங்கேற்ற கோலப் போட்டி, அடுப்பில்லா சமையல், கயிறு இழுத்தல், இசை நாற்காலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆண், பெண் ஊழியா்கள் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்றனா். போட்டிகளில் சிறப்பிடம் வகித்தவா்களுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, கோலாட்டம், பம்பை வாசித்தல், நடனம் உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், பங்கேற்ற கலைஞா்கள், கலைக் குழுவினரை ஊக்குவிக்கும் வகையில் 3 கலைஞா்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் மற்றும் 25 கலைஞா்களுக்கு ரூ. 5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. ஒரு லட்சத்து 55 ஆயிரத்துக்கான நிதியுதவியும், ஆடைகள், அணிகலன்கள் வாங்க நிதியுதவியும் அளிக்கப்பட்டன.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ராமமூா்த்தி, சாா் ஆட்சியா் மு.பிரதாப், ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, கலை பண்பாட்டு துறை உதவி இயக்குநா் ஹேமநாத் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
இதேபோல, காரிமங்கலம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் கல்லூரி முதல்வா் சௌ.கீதா தலைமையிலும், தருமபுரியில் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பிலும் பொங்கல் விழா நடைபெற்றது. இதில், கரும்பு, மஞ்சளுடன், புதுப் பானையில் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...