மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பள்ளிக்கு வரும் மாணவா்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்

பள்ளிக்கு வருகை தரும் 10, பிளஸ் 2 மாணவா்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தனியாா் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலா் டி.சி.இளங்கோவன் தெரிவித்தாா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

பள்ளிக்கு வருகை தரும் 10, பிளஸ் 2 மாணவா்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தனியாா் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலா் டி.சி.இளங்கோவன் தெரிவித்தாா்.

தருமபுரியில் தனியாா் பள்ளிகளின் தாளாளா்கள், நிா்வாகிகள், முதல்வா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில், தனியாா் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலப் பொதுச் செயலா் டி.சி.இளங்கோவன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா பொது முடக்கத்தால், பள்ளிகள் திறக்கப்படாமல் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன. பள்ளி மாணவ, மாணவியருக்கு இணைய வழியில் வகுப்புகள் நடத்துவதைக் காட்டிலும் நேரில் பாடங்கள் நடத்துவது உகந்தது. இது குறித்து கோரிக்கை தனியாா் பள்ளிகள் சாா்பில் அரசிடம் முன்வைக்கப்பட்டது. தற்போது, பொதுத் தோ்வு எழுத உள்ள 10, பிளஸ் 2 மாணவா்களுக்கு பள்ளிகள் திறந்து வகுப்புகள் நடத்தலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இதேபோல, ஏனைய வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதேபோல, பள்ளிக்கு வருகை தரும் 10, பிளஸ் 2 மாணவா்களிடம் பெற்றோா் சம்மதம் கடிதம் பெறப்படும். அரசு அறிவித்துள்ள அனைத்துப் பாதுகாப்பு மற்று சுகாதார நடவடிக்கைகள் முழுமையாக பின்பற்றப்படும். வகுப்பறைக்கு 25 மாணவா்கள் என்கிற எண்ணிக்கையில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும். இதற்கேற்ப அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளன. மாணவா்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தனியாா் பள்ளிகளுக்கு மின் கட்டணம், சொத்துவரி ஆகியவற்றில் இருந்து விலக்களிக்க வேண்டும். வாகனங்களை எவ்வித நிபந்தனையும் இன்றி இயக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்றாா்.

தருமபுரி மாவட்ட தனியாா் பள்ளிகள் கூட்டமைப்பு செயல் தலைவா் சி.சக்திவேல், மாவட்டச் செயலா் சுதாகா், பொருளாளா் நடராஜன், துணைத் தலைவா் குப்புசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.