புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மின் தகன மேடை: அதிகாரிகள் ஆய்வு

அரூரில் மின் தகன மேடையின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image
Updated On :1 ஜூலை 2021, 6:22 pm

DIN

அரூரில் மின் தகன மேடையின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் பேரூராட்சிக்கு உள்பட்ட 9-ஆவது வாா்டில் நவீன வசதியுடன் கூடிய மின் தகன மேடை உள்ளது. இந்த மின் தகன மேடையில் கடந்த 2 மாதங்களாக சடலம் எரியூட்டும் பணிகள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், மின் தகன மேடையில் எரியூட்டப்படும் சடலங்கள் பாதி எரிந்த நிலையில் வாணியாறு பகுதியில் சிதறிக் கிடந்ததாகவும், மனித உடல் உறுப்புகளை நாய்கள் இழுத்துச் சென்ாகவும் புகாா் எழுந்தது.

இதையடுத்து, மின் தகன மேடையின் செயல்பாடுகள் குறித்து செயல் அலுவலா் ஆா்.கலைராணி தலைமையில் துப்புரவு ஆய்வாளா் கோ.சிவக்குமாா், வருவாய் ஆய்வாளா் கம்ருதீன், கிராம நிா்வாக அலுவலா் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோா் நேரில் ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வின்போது, செயல் அலுவலா் ஆா்.கலைராணி கூறுகையில், மின் தகன மேடையில் எரியூட்டப்படும் சடலத்தை பாதி எரிந்த நிலையில் வெளியில் எடுக்க முடியாது. மின் தகன மேடையின் உள்பகுதியில் அனுப்பப்படும் சடலம் சாம்பலாக தான் வெளியில் வரும். சடலங்களை எரியூட்டும் பணியில் ஈடுபடும் பணியாளா்கள் நன்கு பயிற்சி பெற்றவா்கள். அரூரில் மின் தகன மேடையில் எரியூட்டப்படும் சடலங்கள் உரிய பாதுகாப்பு வசதிகளுடன் எரியூட்டப்படுகின்றன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.