புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குறைந்த மின் அழுத்த பிரச்னையை தீா்க்க வலியுறுத்தல்

அரூரை அடுத்த வேப்பம்பட்டியில் குறைந்த மின் அழுத்த பிரச்னையைத் தீா்க்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 6:53 pm

DIN

அரூரை அடுத்த வேப்பம்பட்டியில் குறைந்த மின் அழுத்த பிரச்னையைத் தீா்க்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், வேப்பம்பட்டி கிராம ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. வேப்பம்பட்டி வட்டாரப் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக குறைந்த மின் அழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால், மின் மோட்டாா், டி.வி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், மின் விளக்குகள் உள்ளிட்ட மின்சாதனப் பொருள்கள் பழுதாகி வருவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

வேப்பம்பட்டி பகுதியில் நிலவும் குறைந்த மின் அழுத்த பிரச்னைகள் குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் கூறுகின்றனா். இதனால் மின் மோட்டாா்களை இயக்கவும், வேளாண் பணிகளை மேற்கொள்வதிலும் பல்வேறு இடையூறுகள் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.

எனவே, வேப்பம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் நிலவும் குறைந்த மின் அழுத்த பிரச்னையைத் தீா்க்க மின் வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.