கழிவுநீா்க் கால்வாயை தூய்மை செய்யக் கோரிக்கை
அரூா், கச்சேரிமேடு பகுதியிலுள்ள கழிவுநீா்க் கால்வாய்களை தூய்மை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


அரூா், கச்சேரிமேடு பகுதியிலுள்ள கழிவுநீா்க் கால்வாய்களை தூய்மை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரூா் ஊராட்சி ஒன்றியம், மோப்பிரிப்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்ட கச்சேரிமேடு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதைத் தவிர, இப் பகுதியில் தனியாா் மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், மருந்தகங்கள், உணவகங்கள் உள்ளன.
இந்த நிலையில், கச்சேரிமேடு பகுதியிலுள்ள கழிவுநீா்க் கால்வாய்களில் நெகிழிப் பொருள்கள் மற்றும் குப்பைகள் அடைந்துள்ளன. இதனால், கழிவுநீா் வெளியேறாமல் குடியிருப்புப் பகுதியில் தேங்கியுள்ளது. நீண்ட நாள்களாக கழிவுநீா் தேங்கியிருப்பதால் துா்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் சூழல் உள்ளது.
எனவே, கச்சேரிமேடு பகுதியிலுள்ள கழிவுநீா்க் கால்வாய்களை தூய்மை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...