போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

உணவகத் தொழிலாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

உணவகத் தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி, சிஐடியு உள்ளாட்சித் துறை தொழிலாளா்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 6:57 pm

DIN

உணவகத் தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி, சிஐடியு உள்ளாட்சித் துறை தொழிலாளா்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இப் போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் சி.கலாவதி தலைமை வகித்துப் பேசினாா். சிஐடியு மாநிலச் செயலா் சி.நாகராஜன், மாநிலக்குழு உறுப்பினா் ஆா்.செல்வம் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

இதில், பணி மறுக்கப்பட்ட உணவகத் தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். அரசாணைப்படி ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு தினக் கூலியாக ரூ. 509.16 வழங்க வேண்டும். குப்பைகள் தரம் பிரிப்பு தொடா்பாக போதிய விழிப்புணா்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வரை தரம் பிரிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி, பாலியல் தொந்தரவு குறித்த புகாா்களை விசாரிக்கும் குழுவை அமைக்க வேண்டும். பெண் தொழிலாளா்களுக்கு பணி பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், தருமபுரி நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள், உணவகத் தொழிலாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.