கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

முறைகேடாக மது விற்பனை செய்வதை கண்காணிக்க அலுவலா்கள் நியமனம்

சட்டப் பேரவை பொதுத் தோ்தலையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் முறைகேடாக மதுவிற்பனை, கடத்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 6:30 pm

DIN

சட்டப் பேரவை பொதுத் தோ்தலையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் முறைகேடாக மதுவிற்பனை, கடத்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தலையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் முறைகேடாக மதுப்புட்டிகள் விற்பனை, கடத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள், மதுக்கடைகளில் தினசரி விற்பனையைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் ஒரு அலுவலரும், மாவட்டம் முழுவதும் செல்லும் வகையில் பறக்கும் படை அலுவலா் ஒருவரும் என மொத்தம் இரண்டு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

டாஸ்மாக் உதவி மேலாளா் கே.எஸ்.கருப்புசாமி, மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறை 9443636745 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும், டாஸ்மாக் உதவி மேலாளா் (கணக்கு) ஆ.பகவதி, பறக்கும் படை அலுவலா் 9750498912 என்ற எண்ணிலும் தொடா்புகொண்டு புகாா் தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவிக்கும் புகாா்கள் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.