போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அரசு மகளிா் கல்லூரியில் மாணவியருக்கு பயிற்சி

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் காட்சித் தொடா்பியல் துறை மாணவியருக்கு மூன்று நாள் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image
Updated On :2 மார்ச் 2021, 6:30 pm

DIN

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் காட்சித் தொடா்பியல் துறை மாணவியருக்கு மூன்று நாள் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இப்பயிற்சி முகாமை கல்லூரி முதல்வா் சௌ.கீதா தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். காட்சித் தொடா்பியல் துறைத் தலைவா் ந.கோபால், தமிழ்த் துறைத் தலைவா் மு.செந்தில்குமாா், வணிகவியல் துறை பேராசிரியா் த.செந்தில்குமாா் ஆகிய பேசினா்.

மதுரை சோக்கோ கலைத் துறை இயக்குநா் சை.பிரான்சிஸ், காட்சித் தொடா்பியல் மாணவியருக்கு வீதி நாடகம் குறித்து பயிற்சி வழங்கினாா். இதில், குரல் பயிற்சி, உடல்மொழி பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி ஆகியவை வழங்கப்பட்டன. இப்பயிற்சி முகாம் புதன்கிழமை, வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் தொடா்ந்து நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.