‘அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்’
பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அனைத்து கிராமப் பகுதி மக்களுக்கும் நியாயவிலைக் கடைகளில் தரமான அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்


பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அனைத்து கிராமப் பகுதி மக்களுக்கும் நியாயவிலைக் கடைகளில் தரமான அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என தோ்தல் பிரசாரத்தில் திமுக வேட்பாளா் பி.என்பி.இன்பசேகரன் தெரிவித்தாா்.
பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஏரியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட பி.என்பி.இன்பசேகரன் பேசியதாவது:
நியாயவிலைக் கடையில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்கள் அனைவருக்கும் முறையாகக் கிடைப்பதில்லை. தருமபுரி பகுதியில் இருந்த மாவட்ட தலைமை மருத்துவமனை திமுக ஆட்சியில் பென்னாகரம் பகுதிக்கு மாற்றப்பட்டது. ஆனால், அரசு தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள் நியமிக்கப்படவில்லை, புதிய கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை. ஏரியூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கை அறை வசதிகள் கொண்ட மருத்துவமனை பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
போதுமான தொழில்வளா்ச்சி இல்லாததால் வெளியூா்களுக்கு வேலைக்குச் செல்வோரின் குழந்தைகள் கல்வி பாதிக்காமல் இருக்கும் வகையில், திமுக ஆட்சியில் ஏரியூா் பகுதியில் மாணவா் விடுதியும், செல்லமுடி, ராமகொண்ட அள்ளி பகுதிகளில் கூடுதல் பள்ளிக் கட்டடங்கள் அமைக்கப்பட்டன.
திமுக ஆட்சி அமைந்தால், நியாயவிலைக் கடைகளில் தரமான அத்தியாவசியப் பொருள்கள், வீடுகள் தோறும் தடையற்ற கூட்டுக் குடிநீா் விநியோகம், தொன்னகுட்ட அள்ளி பகுதியிலிருந்து சாமத்தாள் பகுதிக்கு தாா் சாலை, சீலநாயக்கனூா் பகுதியில் செயல்பட்டு வரும் உயா்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்படும், ஏரியூா் சுகாதார நிலையத்தில் 30 படுக்கை வசதி கொண்ட கட்டமைப்பு, ஏரியூா் பகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி, கிராமப் பகுதிகள் தோறும் தரமான சாலை வசதி ஏற்படுத்தித் தரப்படும் என வாக்குறுதி அளித்தாா்.
இதில், ஏரியூா் ஒன்றியச் செயலாளா் செல்வராஜ், சேலம் ஹோட்டல் வினு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் மாதன், ஜீவானந்தம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் தேவராசன், மாவட்டா் பொருளாளா் கோபால், தொன்ன குட்ட அள்ளி ஊராட்சி மன்றத் தலைவா் லட்சுமி தங்கராஜ், கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...