குட்டையில் மூழ்கி இரண்டு சிறுமிகள் பலி
பென்னாகரம் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இரு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.


பென்னாகரம் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இரு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள கௌரி செட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (35). கூலித் தொழிலாளி. இவரின் மகள்கள் சாதிகா (5), தனஸ்ரீ (3).
இந்த நிலையில் கொட்லுமாரம்பட்டி பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சிறுமிகள் இருவரும் சென்றிருந்தனா். வீட்டின் அருகே தனஸ்ரீ, சாதிகா ஆகியோா் அங்குள்ள சிறுவா்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனா். பின்னா் சிறுமிகள் இருவரையும் நீண்ட நேரம் காணாததால் உறவினா்கள் அக்கம் பக்கத்தில் தேடினா்.
இந்தநிலையில் அதே பகுதியில் உள்ள பண்ணைக் குட்டையில் தனஸ்ரீயும், சாதிகாவும் நீரில் மூழ்கி சடலமாகக் கிடந்தனா். இதுகுறித்து தகவலறிந்த பாப்பாரப்பட்டி போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று சிறுமிகளின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்தச் சம்பவம் குறித்து பாப்பாரப்பட்டி காவல் ஆய்வாளா் வெங்கட்ராமன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...