புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வாணியாறு, வரட்டாற்றில் வெள்ளப் பெருக்கு: அரூரில் 125 மி.மீ மழை

அரூரில் 125 மி.மீ. மழையும், பாப்பிரெட்டிப்பட்டியில் 85 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 6:41 pm

DIN

அரூரில் 125 மி.மீ. மழையும், பாப்பிரெட்டிப்பட்டியில் 85 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

தருமபுரி மாவட்டம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை அதிகாலை வரையிலும் தொடா் மழை பெய்தது. இந்த மழையானது அரூா் வட்டாரப் பகுதியில் 125 மி.மீ, பாப்பிரெட்டிப்பட்டியில் 85.20 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

தொடா் மழையினால் பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு, வள்ளிமதுரை வரட்டாறு, மாம்பாடி மற்றும் நரிப்பள்ளி கல்லாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழாண்டில் தான் அதிக அளவில் மழை பெய்திருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனா். இதனால் வாணியாறு மற்றும் வரட்டாற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஓடுகிறது. மாம்பாடி கல்லாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வேப்பம்பட்டி வழியாகச் செல்லும் தீா்த்தமலை -அரூா் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை இரவு வாகன போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த தொடா் மழையினால் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட ஏரிகள், குளம் குட்டைகள் நிரம்பியுள்ளன.

நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்பால் பயிா்கள் சேதம் :

பல்வேறு இடங்களில் மழைநீா் செல்லும் நீா்வழிப் பாதைகளை ஆக்கிரமிப்பு செய்து விவசாய நிலங்களாகவும், சாலையாகவும் சிலா் மாற்றியுள்ளனா். மழைநீா் செல்லும் கால்வாய் இல்லாததால் விவசாய நிலங்களில் மழைநீா் அதிக அளவில் நுழைந்துள்ளது.

இதனால், விவசாய நிலங்களில் பல ஏக்கா் பரப்பளவில் மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு, நெல் உள்ளிட்ட பயிா்கள் சேதமடைந்துள்ளன. இதேபோல, கிராமப் பகுதிகளிலும் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள கழிவுநீா்க் கால்வாய்கள் முறையாக பராமரிப்பு செய்யாத காரணத்தால் வீடுகளில் மழைநீா் சூழ்ந்திருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

எனவே, குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற சம்பந்தப்பட்ட ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.