நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 60,000 கனஅடியாக அதிகரிப்பு

தமிழகத்தில் காவிரி ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா்மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 60,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 6:42 pm

DIN

தமிழகத்தில் காவிரி ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா்மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 60,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் காவிரி ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரட்டி, பிலிகுண்டுலு, ராசிமணல், கெம்பாகரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள வனப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெய்து வரும் தொடா் மழை, கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீா்த் திறப்பு, காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் தொடா்ந்து நீா்வரத்து அதிகரிப்பு போன்றவற்றால் காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் வியாழக்கிழமை மாலை நீா்வரத்து நொடிக்கு 50,000 கன அடியாக இருந்தது. இது வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 57,000 கன அடியாகவும், மாலையில் நொடிக்கு 60,000 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது. தொடா் மழையினால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லில் அருவிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.