புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வனப்பகுதியில் குப்பை கொட்டுவதைத் தடுக்க வலியுறுத்தல்

வனப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:32 pm

DIN

வனப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

அரூா்-மொரப்பூா் நெடுஞ்சாலை ஓரத்தில் வனப் பகுதிகள் உள்ளன. இந்த வனப் பகுதியில் ஏராளமான மான்கள், முயல்கள், மயில்கள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. அரூா் நகா்ப் பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனைகள், உணவகங்கள், பல் பொருள் அங்காடிகள், பேக்கரிகள் உள்ளிட்டவைகளின் குப்பைகள் அரூா்-மொரப்பூா் சாலையோரத்தில் வீசப்படுகிறது.

இந்தச் சாலையில் அரசு மருத்துவமனை வளாகம், அரூா் அரசு கலை அறிவியல் கல்லூரி, அரசு அலுவலகங்கள், குடியிருப்புகள் உள்ளன.

வனப்பகுதி மற்றும் சாலையோரத்தில் குப்பைகளைக் கொட்டுவதால் துா்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது. எனவே, அரூா்-மொரப்பூா் நெடுஞ்சாலையோரத்தில் குப்பைகள் கொட்டுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.