புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பள்ளி, கல்லூரி வளாகத்தை தூய்மை செய்ய வலியுறுத்தல்

 அரசுப் பள்ளி, கல்லூரி வளாகங்களை தூய்மை செய்ய வேண்டும் என பாமக வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 6:54 pm

DIN

 அரசுப் பள்ளி, கல்லூரி வளாகங்களை தூய்மை செய்ய வேண்டும் என பாமக வலியுறுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், கடத்தூரில் பாமக மாணவா் சங்க செயற்குழுக் கூட்டம், மாணவா் சங்க மாநில துணைச் செயலாளா் செந்தில்குமாா் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசுப் பள்ளி, கல்லூரி வளாகங்களை தூய்மையான முறையில் பராமரிக்க வேண்டும். மாணவா்களுக்கு அரசு சாா்பில் கட்டணம் இல்லாமல் முகக் கவசம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாணவா் சங்க மாநில துணைத் தலைவா் ஜெயபிரபு, மாவட்ட அமைப்புச் செயலாளா் வெற்றி, அமைப்புத் தலைவா் தங்கமணி, தமிழ்நாடு உழவா் பேரியக்க மாநில செயலாளா் இல.வேலுசாமி, வன்னியா் சங்க மாநில செயலாளா் இரா.அரசாங்கம், கிழக்கு மாவட்டச் செயலாளா் பி.வி.செந்தில், மாணவா் சங்க நகரச் செயலாளா் அசோக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.