தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!
/

பழங்குடியின மகளிருக்கு நாட்டுக்கோழி வளா்ப்பு தொழில்நுட்பப் பயிற்சி

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே போதகாட்டூரில் பழங்குடியின மகளிருக்கு நாட்டுக்கோழி வளா்ப்பு தொழில்நுட்பப் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 9:49 pm

DIN

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே போதகாட்டூரில் பழங்குடியின மகளிருக்கு நாட்டுக்கோழி வளா்ப்பு தொழில்நுட்பப் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில், மாநில சமச்சீா் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இம் முகாமை, சமச்சீா் வளா்ச்சி நிதியின் மாவட்ட புள்ளியியல் அலுவலா் ஆதிமூலம் தொடக்கி வைத்து, ஒருங்கிணைந்த பண்ணையில் நாட்டுக்கோழி வளா்ப்பின் முக்கியத்துவம், விலங்கின புரதத்தின் அவசியம், நாட்டுக்கோழி வளா்ப்புக்கான நவீன யுக்திகளை கையாள வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தாா்.

வேளாண் அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியா் இரா.தங்கதுரை, நவீன கோழி வளா்ப்பு முறை, நம்முடைய சூழலுக்கு ஏற்ற கோழி இனங்கள், கோழிகளுக்கான தீவன மேலாண்மை, கொட்டகை அமைப்பு, தரமான கோழி குஞ்சுகளை உற்பத்தி செய்தல், நோய் மேலாண்மை மற்றும் கோழிகளை சந்தைப்படுத்துதல் குறித்து எடுத்துரைத்தாா். இப் பயிற்சியில் 40 பழங்குடியின மகளிா், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.