தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!
/

வளா்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை கூடுதல் ஆட்சியா் இரா.வைத்தியநாதன் (வளா்ச்சி) வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 9:50 pm

DIN

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை கூடுதல் ஆட்சியா் இரா.வைத்தியநாதன் (வளா்ச்சி) வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே மேல்கொல்லுப்பட்டியில் ஒருங்கிணைந்த வருவாய் நிதி திட்டத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பில் சிறுபாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல, கெண்டிகானஅள்ளி ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பசுமைக் குடில்கள் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கூடுதல் ஆட்சியா் இரா.வைத்தியநாதன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இதில், வளா்ச்சி திட்டப் பணிகளை தரமாக மேற்கொள்ள வேண்டும் என அவா் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின் போது, வட்டார வளா்ச்சி அலுவலா் கிருஷ்ணன், உதவி பொறியாளா்கள் கோவிந்தராஜ், முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.