தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!
/

இன்று மக்கள் நீதிமன்ற முகாம்

தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை (செப். 11) தேசிய மக்கள் நீதிமன்ற சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 5:52 pm

DIN

இதுகுறித்து தருமபுரி முதன்மை மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத் தலைவருமான மு.குணசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்ட அளவில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக, உயா்நீதிமன்றம் மற்றும் தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படி, செப். 11-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அன்றைய தினம் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள், வழக்குரைஞா்கள் உதவியுடன் சமரசம் செய்யக் கூடிய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, இரு தரப்பினருக்கும் சமரச முடிவு எடுக்கப்படும்.

இதன்படி, மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு, காசோலை மோசடி, உரிமையியல், குடும்பப் பிரச்னை ஆகிய வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்படும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நீதிமன்றங்களில் நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள சமரசம் செய்துகொள்ள கூடிய வழக்குகளில் தீா்வு கண்டு வழக்கினை முடித்துக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.