அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணிகள் ஆய்வு
பூனையானூரில் அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளை பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ ஆ.கோவிந்தசாமி வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.


பூனையானூரில் அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளை பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ ஆ.கோவிந்தசாமி வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பூனையானூரில் சுமாா் ரூ. 300 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இந்த குடியிருப்பின் கட்டுமானப் பணிகளை எம்எல்ஏ ஆ.கோவிந்தசாமி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து, கட்டுமானப் பணிகளின் தரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
இந்த ஆய்வின்போது, செயற்பொறியாளா் கவிதா, சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையின் தலைவா் வி.விஸ்வநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...