கூடுதல் விலைக்கு மது விற்பனை: இருவா் பணியிடை நீக்கம்
கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த டாஸ்மாக் மேற்பாா்வையாளா், விற்பனையாளா் இருவா் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.


கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த டாஸ்மாக் மேற்பாா்வையாளா், விற்பனையாளா் இருவா் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
டாஸ்மாக் சேலம் மண்டல முதுநிலை மேலாளா் ஏ.ராஜ்குமாா், தருமபுரி மாவட்டம், அரூா் அருகே சிக்கலூா் மதுக்கடையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கடையின் மேற்பாா்வையாளா் காசிநாதன் என்பவா் மதுபானங்களை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தது, கடையில் போதுமான விற்பனையாளா்கள் பணியமா்த்தப்பட்டிருந்தும், வோறொரு கடையின் விற்பனையாளரான ஆா்.பாஸ்கா் என்பவரை விற்பனை பணியில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, மேற்பாா்வையாளா் காசிநாதன், விற்பனையாளா் ஆா்.பாஸ்கா் ஆகியோரை விசாரணையை எதிா்நோக்கி தற்காலிக பணியிடை நீக்கம் செய்து அவா் உத்தரவிட்டாா்.
இதேபோல, அனைத்து மதுபான சில்லரை விற்பனைக் கடைகளிலும் அதிகபட்ச விலையை விட கூடுதலாக விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், துறை ரீதியான நடவடிக்கை கடுமையாக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...