ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைவு
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 15,000 கன அடியாகக் குறைந்துள்ளது.


கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 15,000 கன அடியாகக் குறைந்துள்ளது.
கா்நாடக, கேரள காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் அண்மையில் கனமழை பெய்ததால் கா்நாடகத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு வரும் உபரி நீரின் அளவு அதிகரித்தது. அதனைத் தொடா்ந்து, அணைகளின் பாதுகாப்பு கருதி சுமாா் 20,000 கன அடி நீா் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வந்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து கடந்த இரு தினங்களுக்கு முன் நொடிக்கு 16,000 கன அடியாக அதிகரித்தது.
தற்போது இரு மாநில காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்துள்ளதால், கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 16,000 கன அடியாக இருந்த தண்ணீரின் நீா்வரத்தானது, சனிக்கிழமை நிலவரப்படி நொடிக்கு 14,000 கன அடியாக குறைந்து தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருந்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ளதால், அங்குள்ள பிரதான அருவிகள், சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீா்வரத்து குறைந்து தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.
பருவ மழையினால் வரும் நீா்வரத்தினை பொறுத்து கா்நாடக அணைகளில் இருந்து நீா்வரத்து வெளியேற்றப்பட்டு வருவதால், காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தினை பிலிகுண்டுலு பகுதியில் உள்ள மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து அளவீடு செய்யும் பணியினை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...