எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

தருமபுரியில் இன்று 210 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம்

தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 19) 210 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 6:54 pm

DIN

தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 19) 210 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்று இரண்டாம் அலை கட்டுக்குள் வந்து தொற்று பாதிப்போரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 7,59,686 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்கள் மூலம் தினமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்கள் 84 நாள்களுக்கு பிறகும், கோவாக்சின் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்கள் 28 நாள்களுக்கு பிறகும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

மாவட்டத்தில் கடந்த செப். 12-ஆம் தேதி 830 இடங்களில் 49,136 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 50 சதவீதத்துக்கு மேல் முதல்தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை 210 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

எனவே, விடுபட்ட பயனாளிகள், முன்களப் பணியாளா்கள், போக்குவரத்துத் துறை ஊழியா்கள், ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், வணிகா் சங்கங்கள், மருத்துவ பிரதிநிதிகள், ஆட்டோ ஓட்டுநா்கள், உணவக ஊழியா்கள், மருந்தக ஊழியா்கள், கோயில் மற்றும் சுற்றுலா தல ஊழியா்கள், பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.