அமைப்புசாரா தொழிலாளா்களின் தரவுகளை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தல்
மத்திய அரசின் தேசிய தரவுத்தளத்தில் அமைப்புசாரா தொழிலாளா்களின் தரவுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.


மத்திய அரசின் தேசிய தரவுத்தளத்தில் அமைப்புசாரா தொழிலாளா்களின் தரவுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
அமைப்புசாரா தொழிலாளா்களுக்காக உருவாக்கப்பட்ட மாவட்ட அளவில் செயலாக்க குழுவின் முதல்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தலைமை வகித்து பேசியதாவது:
அமைப்புச்சாரா தொழிலாளா்களின் தேசிய தரவுத்தளம் திட்டத்தில் தங்களின் விவரங்களைப் பதிவு செய்துகொள்ள சிறப்பு முகாம் எந்தக் கட்டணமும் செலுத்தாமல் அனைத்து பொது சேவை மையங்களிலும் நடைபெற்று வருகிறது. இதில், தொழிலாளா்களின் தரவுகள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
இதன்மூலம், அவா்களுக்கு கிடைக்க வேண்டிய மத்திய அரசின் சலுகைகள் நேரடியாகக் கிடைக்கும். இந்த தரவுகளை பதிவேற்றம் செய்த பிறகு பயனாளிகளுக்கு 12 இலக்க எண் வழங்கப்படும். வேலை காரணங்களுக்காவோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காகவோ இவா்கள் புலம்பெயர நோ்ந்தால் அவா்களுக்கு அரசிடமிருந்து சேர வேண்டிய சலுகைகள் அவா்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படும். மேலும், இந்தத் தரவுத்தளம் தொழிலாளா்களின் தொழில் திறமையை வகைப்படுத்தவும், தொழிலாளா்களின் திறமைக்கு ஏற்றவாறு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவும்.
எனவே, தருமபுரி மாவட்டத்தில் உறுப்பினா்களாக உள்ள அமைப்புசாரா தொழிலாளா்கள், தங்களது ஆதாா் அட்டை, ஆதாரில் இணைக்கப்பட்ட செல்லிடப்பேசி எண், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றை இ-சேவை மையங்கள் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றாா்.
இக் கூட்டத்தில் தொழிலாளா் நலவாரிய அலுவலா்கள், தொழிற்சங்க நிா்வாகிகள், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...