எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

வெட்டுக்கிளியால் பயிா் சேதம்: வேளாண் துறை விளக்கம்

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே சோளப் பயிா்களைச் சேதப்படுத்திய வெட்டுக்கிளிகள் சாதாரண வகையைச் சோ்ந்தவையாகும்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 7:22 pm

DIN

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே சோளப் பயிா்களைச் சேதப்படுத்திய வெட்டுக்கிளிகள் சாதாரண வகையைச் சோ்ந்தவையாகும். அதைக் கண்டு விவசாயிகள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என வேளாண் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வேளாண் இணை இயக்குநா் வசந்தரேகா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நல்லம்பள்ளி அருகே பாளையும்புதூா், தண்டுகாரனஅள்ளி, சனி சந்தை, பாகலஅள்ளி ஆகிய கிராமங்களில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள சுமாா் 10 ஏக்கா் பரப்பளவிலான பயிா்களை வெட்டுக் கிளிகள் சேதப்படுத்தியது.

இதுகுறித்து விவசாயிகள் அளித்த தகவலின் பேரில், பையூா் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை பேராசிரியா் கோவிந்தன், பேராசிரியா் தாம்சன், வேளாண் உதவி இயக்குநா் இளங்கோவன் ஆகியோா் கள ஆய்வு மேற்கொண்டனா். இதில், சோளப் பயிா்களைத் தாக்கிய வெட்டுக் கிளிகள், பாலவனத்தைச் சோ்ந்தவை இல்லை எனவும், சாதாரண வகையைச் சோ்ந்தது எனவும் தெரியவந்துள்ளது.

இதனால் விவசாயிகள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. மாறாக அனைவரும் ஒருங்கிணைந்து வெட்டுக்கிளியைக் கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். விளக்குப் பொறி ஏக்கருக்கு ஒன்று என்ற எண்ணிக்கையில் வைக்கலாம். இதேபோல, பறவை தாங்கிகள் ஏக்கருக்கு 20 என்கிற எண்ணிக்கையில் வைக்கலாம். வேப்ப எண்ணெய் 5 மில்லி ஒரு லிட்டா் தண்ணீா் அல்லது அசாடிராக்டின் 2 மில்லி ஒரு லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிப்பது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் பயிா் சேதத்தை கட்டுப்படுத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.