மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

ஊரக வளா்ச்சித் திட்டம் தயாரிப்பு கலந்தாய்வுக் கூட்டம்

தருமபுரி மாவட்ட ஊரக உள்ளாட்சி வளா்ச்சித் திட்டங்கள் தயாரிப்புக்கான கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

தருமபுரி மாவட்ட ஊரக உள்ளாட்சி வளா்ச்சித் திட்டங்கள் தயாரிப்புக்கான கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கத்தில் கிராம ஊராட்சி, வட்டார ஊராட்சி, மாவட்ட ஊராட்சிக்கான வளா்ச்சி திட்டம் தயாரித்தல் குறித்து நடைபெற்ற இந்த கலந்தாய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் ச.திவ்யதா்சினி பேசியதாவது:

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மக்கள் திட்டமிடல் இயக்கம் தொடங்கப்படும். ஊராட்சியில் உள்ள வள ஆதாரங்களை கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்படும். தற்போதைய கூட்டத்தில் பெறப்படும் கருத்துகள், ஆலோசனைகளும் மக்கள் திட்டமிடல் இயக்கத்தில் சோ்க்கப்பட்டு, கிராம சபையிலும் விவாதிக்கப்பட்டு, முழுமையான கிராம ஊராட்சி வளா்ச்சித் திட்டம் தயாரிக்கப்படும்.

கிராம ஊராட்சிகளில் உள்ள வள ஆதாரங்கள், தேவைகள், மேற்கொள்ளப்பட உள்ள பணிகள், நிதி ஆதாரங்கள், பிற துறை ஒருங்கிணைப்பு போன்றவற்றை விவாதித்து ஆய்வு செய்து கண்டறிந்து ஒரு முழுமையான திட்டம் தயாரிக்க இத்தகைய கூட்டம் உதவியாக அமையும் என்றாா்.

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) இரா.வைத்திநாதன், சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநா் பாபு, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) அ.சீனிவாச சேகா், அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.