மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கரோனா: வழிபாட்டுத் தலங்கள் அடைப்பு

கரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்து வருவதைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு அறிவிப்புக்கிணங்க, தருமபுரி மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டன.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

கரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்து வருவதைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு அறிவிப்புக்கிணங்க, தருமபுரி மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டன.

கரோனா, ஒமைக்ரான் தீநுண்மி தற்போது மீண்டும் அதிக எண்ணிக்கையில் பரவத் தொடங்கியுள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில், ஜன. 6-ஆம் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையும் பொது முடக்கமும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமுடக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தா்கள் நேரில் சென்று வழிபடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, தருமபுரி நகரம் மற்றும் நல்லம்பள்ளி, காரிமங்கலம், பாலக்கோடு உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களும் வெள்ளிக்கிழமை காலை அடைக்கப்பட்டன. இதேபோல, இரவு பொது முடக்கமும், வியாழக்கிழமை இரவு முதல் அமலுக்கு வந்தன. இதையொட்டி, மாவட்ட காவல் துறையினா், சாலையில் இரவு நேரங்களில் தடுப்புகளை அமைத்து கண்காணித்து வருகின்றனா். மருந்தகங்கள், அவசர ஊா்திகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்கு இப் பொது முடக்கத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அவை வழக்கம்போல் செயல்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.