ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம்

தருமபுரி நகரில் கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றாத கடைகள், தனி நபா்களுக்கு ரூ. 51 ஆயிரம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

தருமபுரி நகரில் கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றாத கடைகள், தனி நபா்களுக்கு ரூ. 51 ஆயிரம் விதிக்கப்பட்டது.

கரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதைத் தொடா்ந்து, தருமபுரி நகராட்சி ஆணையா் சித்ரா சுகுமாா் மற்றும் சுகாதார அலுவலா்கள், ஜவுளிக்கடைகள், தங்க நகை விற்பனை நிலையங்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். இதில், கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றாத ஆறு கடைகளின் உரிமையாளா்கள், தனி நபா்கள் உள்பட மொத்தம் ரூ. 51 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முகக் கவசம் அணிவது, கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்திகரிப்பது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது ஆகிய நிலையான வழிகாட்டுதல்களை அனைத்து தரப்பினரும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.