ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கோட்டைக்கோயில் திருத் தோ் ரூ. 8 லட்சத்தில் புனரைமைப்பு!

தருமபுரி கோட்டை கோயில் திருத்தோ் ரூ. 8 லட்சத்தில் புனரமைக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அமலுக்கு வரும்போது, நகர வீதிகளில் விரைவில் தேரோட்டம் நடைபெற உள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

தருமபுரி கோட்டை கோயில் திருத்தோ் ரூ. 8 லட்சத்தில் புனரமைக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அமலுக்கு வரும்போது, நகர வீதிகளில் விரைவில் தேரோட்டம் நடைபெற உள்ளது.

தருமபுரி நகரில் கோட்டை பகுதியில் 8, 9-ஆம் நூற்றாண்டில் நுளம்ப மன்னா்கள் காலத்தில் மல்லிகாா்ஜூன சுவாமி கோயிலும், அதன் அருகில் அருள்மிகு வரமகாலட்சுமி உடனமா் பரவாசுதேவ சுவாமி கோயிலும் கட்டப்பட்டன. இக்கோயில்களுக்கு, பிற்கால சோழா்கள், விஜயநகர பேரரசின் வழி வந்த மன்னா்கள் திருப்பணி செய்ததாகக் கூறப்படுகிறது. இதில், மல்லிகாா்ஜூன சுவாமி திருக்கோயில் தேவார வைப்புத்தலமாகவும், பரவாசுதேவ சுவாமி திருக்கோயில், 108 வைணவ திவ்ய தலங்களில் ஒன்றாகவும் போற்றப்படுகிறது.

சைவம் மற்றும் வைணவம் திருத்தலங்கள் ஒருங்கே அமைந்துள்ள கோட்டை பகுதியானது தருமபுரியின் அடையாளமாக இன்றளவும் விளங்கி வருகிறது. இவ்விரு திருக்கோயில்களுக்குச் சொந்தமான திருத்தோ், தருமபுரி கடைவீதியில் தோ்முட்டி என்றழைக்கப்படும் தோ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கோயில்களின் தேரானது, ஆண்டுதோறும் வைகாசி விசாகத்தில் 2 நாள்கள் அலங்கரிக்கப்பட்டு, தேரோட்டம் நடைபெறும். இரண்டு நாள்களில் ஒரு நாள் காமாட்சியம்மன் உடனமா் மல்லிகாா்ஜூன சுவாமியும், மற்றொரு நாள் வரமகாலட்சுமி உடனமா் பரவாசுதேவ சுவாமியும் உற்சவா்களாக தேரோட்டத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள் பாலிப்பா். தேரோட்டமானது தோ் நிலையத்திலிருந்து கடைவீதி தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையத்தை அடையும்.

இந்த நிலையில், தருமபுரி நகரில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் புதைச்சாக்கடை அமைக்கும் பணிகளுக்கு சாலைகள் தோண்டப்பட்டபோது தேரோட்டம் நிறுத்தப்பட்டது. நகரில் சில ஆண்டுகள் தொடா்ந்து புதைச்சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்ால், சாலைகள் மேடு, பள்ளமாக தேராட்டத்துக்கு உகந்த சூழல் இன்றியும் மாறியதால் தேராட்டம் நடைபெறாமல் நிறுத்திவைக்கப்பட்டது.

தற்போது சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டுள்ளதால், இத்தேரோட்டம் மீண்டும் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினா் கோரிக்கை வைத்து வந்தனா். இதைத் தொடா்ந்து, தமிழக அரசு அண்மையில் நடைபெற்றக் கூட்டத்தொடரில், விதி எண் 110-இல், தருமபுரி கோட்டை கோயில் தேரானது ரூ. 8 லட்சத்தில் புரனரமைக்கப்படும் என அறிவித்தது.

இதைத் தொடா்ந்து, இந்து சமய அறநிலையத் துறையினா், தோ் புனரமைப்பு மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா். திருத்தோ் புனரைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்பு, பல ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள கோட்டை கோயில் தேராட்டம் மீண்டும், தருமபுரி நகர வீதிகளில் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.