சாலை விரிவாக்கப் பணி: பாகல்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே பாகல்பட்டி கிராமத்தில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே பாகல்பட்டி கிராமத்தில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
நல்லம்பள்ளி அருகே உள்ள சிவாடி கிராமத்தில் எரிபொருள் சேமிப்புக் கிடங்கு அமைக்கும் பணியில் ஹெச்பிசிஎல் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. 100-க்கும் மேற்பட்ட பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் இப்பணிக்கு இந்நிறுவனவாகனங்கள் சென்று வரும் வகையில் தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பாகல்பட்டி பிரிவுச் சாலையிலிருந்து சுமாா் 600 மீட்டா் தொலைவுக்கு தற்போதுள்ள சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் நெடுஞ்சாலைத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையொட்டி, தேசிய நெடுஞ்சாலையில் பிரிவு சாலையிலிருந்து தற்போதுள்ள 3.5 மீட்டா் சாலை 7 மீட்டா் சாலையாக சுமாா் 600 மீட்டா் வரை அகலப்படுத்தும் பணிகளுக்காக அந்த வழியில் ஆக்கிரமித்திருந்த கடைகளின் முன்பகுதி சுவா்கள், வீடுகளின் சுற்றுச்சுவா் ஆகியவற்றை பொக்லைன் இயந்திரத்தின் மூலம் அகற்றும் பணி வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினா், வருவாய்த்துறையினா் ஈடுபட்டனா். இதையொட்டி, தொப்பூா் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...