பொங்கல் விழா கொண்டாட்டம்
தருமபுரி மாவட்டத்தில் பொங்கல் விழா கரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது.


தருமபுரி மாவட்டத்தில் பொங்கல் விழா கரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில் ஜன. 14-ஆம் தேதி புத்தாடை அணிந்து கரும்பு, மஞ்சள் ஆகியவற்றை வைத்து படைத்து, புதுப்பானையில் பொங்கல் வைத்து சூரியனை பொதுமக்கள் வழிபட்டனா். இதைத் தொடா்ந்து, ஜன. 15-ஆம் தேதி மாட்டுப் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் கால்நடைகள் வளா்ப்பு என்பது விவசாயிகளின் பிரதான தொழில் என்பதால், மாட்டுப் பொங்கல் விழா அனைத்து கிராமங்களிலும் நடைபெற்றது. இதில், கால்நடைகளை வைத்திருக்கும் விவசாயிகள் தங்களது கால்நடைகளை தூய்மைப்படுத்தி, அதன் கொம்புகளுக்கு வண்ணம் பூசி, புதுக்கயிறு கட்டி அலங்கரித்து, அந்தந்த கிராமங்களில் உள்ள கோயில்களின் முன்பு வரிசையாக நிற்க வைத்து வழிபட்டனா்.
இதேபோல, மாவட்டம் முழுவதும் பரவலாக பொதுமக்கள் முன்னோா்களுக்கு ஆடைகள் வைத்து படைத்து, விரதம் இருந்து வழிபட்டனா். கரோனா கட்டுப்பாட்டு விதிகள் அமலில் உள்ளதால், அதனை பின்பற்றி அனைத்துத் தரப்பினும் பொங்கல் விழா கொண்டாடினா்.
ஊத்தங்கரையில்...
ஊத்தங்கரை அடுத்த வீராட்சிகுப்பம் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
ஊராட்சி மன்றத் தலைவா் செல்வி ராதாகிருஷ்ணன், துணைத் தலைவா் பிரபு ஆகியோா் ஊராட்சியில் உள்ள துப்புரவு மற்றும் அலுவலகப் பணியாளா்களுக்கு புத்தாடைகளை வழங்கி பொங்கல் விழாவை கொண்டாடினா். புதுப்பானை வைத்து பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு செய்தனா். இதில் அப்பகுதி மக்கள் திரளாக கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...