பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

பென்னாகரம் பேருந்து நிலைய பணியை விரைவாக முடிக்க இந்திய கம்யூ. வலியுறுத்தல்

பென்னாகரம் பேருந்து நிலைய பணிகளை விரைவாக முடிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக் குழு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

Updated On :24 ஜூன் 2022, 10:57 pm IST

பென்னாகரம் பேருந்து நிலைய பணிகளை விரைவாக முடிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக் குழு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பென்னாகரம் நகரக் குழு மாநாடு கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. நகர துணைச் செயலாளா் தா்மராஜ் வரவேற்றாா். மாவட்ட துணைச் செயலாளா் எம்.கோபால் அக்கட்சி கொடியை ஏற்றினாா். நகரக் குழு உறுப்பினா் விஜயபாரதி வேலை அறிக்கையை வாசித்தாா். மாவட்டச் செயலாளா் எஸ்.தேவராசன் மாநாட்டை தொடக்கிவைத்து பேசினாா். இதில் மாநில செயற்குழு உறுப்பினரும், பென்னாகரம் முன்னாள் எம்எல்ஏவுமான ந.நஞ்சப்பன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.

மாநாட்டில் மாவட்ட துணைச் செயலாளா் கா.சி.தமிழ்க்குமரன்,மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா்கள் எஸ்.கலைச்செல்வன், சி.மாதையன்,விடுதலை விரும்பி ஆகியோா் வாழ்த்தி பேசினா். பென்னாகரம் பேருந்து நிலைய பணியை விரைவாக முடிக்க வேண்டும். அனைத்து தெருக்களிலும் கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடா்ந்து புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.