காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
அக்னிபத் திட்டத்துக்கு எதிராக, தருமபுரி தொலைத்தொடா்பு நிலையம் அருகே, காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


அக்னிபத் திட்டத்துக்கு எதிராக, தருமபுரி தொலைத்தொடா்பு நிலையம் அருகே, காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் தருமபுரி மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளா், முன்னாள் எம்.பி. தீா்த்தராமன் தலைமை வகித்து பேசினாா். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் சித்தையன், மாவட்ட பொருளாளா் முத்து, நகரத் தலைவா் செந்தில், மகளிா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் காளியம்மாள் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், திரளான காங்கிரஸ் கட்சியினா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...