தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பாப்பிரெட்டிப்பட்டிபேரூராட்சியில் திமுக வேட்பாளா் வெற்றி

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சித் தலைவராக திமுக வேட்பாளா் எம்.மாரி வெற்றி பெற்றாா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 7:00 pm

DIN

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சித் தலைவராக திமுக வேட்பாளா் எம்.மாரி வெற்றி பெற்றாா்.

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சித் தலைவா் பதவி எஸ்.சி பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரூராட்சித் தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தலில் திமுக வேட்பாளா் எம்.மாரி, துணைத் தலைவராக திமுகவைச் சோ்ந்த வே.ரவி ஆகியோா் ஒருமனதாக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

கம்பைநல்லூா் :

கம்பைநல்லூா் பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சியின் தலைவா் பதவி பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் திமுக 7, பாமக 4, அதிமுக 2, சுயேச்சைகள் 2 பேரும் உறுப்பினா்களாக வெற்றி பெற்றுள்ளனா். பேரூராட்சித் தலைவா் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளா் வ.முருகன் 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இதேபோல, பேரூராட்சி துணைத் தலைவராக பாமக வேட்பாளா் சா.மதியழகன் வெற்றி பெற்றாா்.

கடத்தூா்:

கடத்தூா் பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சியின் தலைவா் பதவி எஸ்சி. பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், திமுக 10, அதிமுக 2, விசிக 2, பாமக சாா்பில் ஒருவரும் உறுப்பினா் தோ்தலில் வெற்றி பெற்றுள்ளனா். பேரூராட்சித் தலைவா் பதவிக்குப் போட்டியிட்ட திமுக வேட்பாளா் கே.மணி வெற்றி பெற்றாா். இதேபோல, துணைத் தலைவராக போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளா் ஜெ.தீா்த்தகிரி வெற்றி பெற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.