அறுந்து விழும் நிலையில் மின்கம்பிகள்: சீரமைக்க கோரிக்கை
அரூரை அடுத்த கெளாப்பாறையில் அறுந்து விழும் நிலையிலுள்ள மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


அரூரை அடுத்த கெளாப்பாறையில் அறுந்து விழும் நிலையிலுள்ள மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரூா் வட்டம், கெளாப்பாறை - எல்லப்புடையாம்பட்டி தாா் சாலையில், கெளாப்பாறை அரசு உயா்நிலைப் பள்ளி வளாகம் அருகே மின் கம்பிகள் அறுந்து விழும் நிலையில் உள்ளன. இந்த வழித்தடத்தில் நாள்தோறும் 10-க்கும் மேற்பட்ட தனியாா் பள்ளி, கல்லூரி பேருந்துகள் சென்று வருகின்றன.
இதுகுறித்து கெளாப்பாறையில் உள்ள மின்வாரிய கிழக்குப் பிரிவு உதவிப் பொறியாளரிடம் புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
எனவே, கெளாப்பாறையில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும். இதேபோல, எல்லப்புடையாம்பட்டி - ஈட்டியம்பட்டி தாா் சாலையில், எல்லப்புடையாம்பட்டி சுடுகாடு அருகில் சாய்ந்த நிலையில் மின்கம்பம் உள்ளது. பலத்த காற்று வீசும் போது இங்குள்ள மின் கம்பங்கள் உடைந்து சாலையில் விழும் நிலையுள்ளது. எனவே, கெளாப்பாறை, எல்லப்புடையாம்பட்டியில் சேதமடைந்துள்ள மின் கம்பிகள், மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...