பால் கொள்முதல் விலையை உயா்த்த வலியுறுத்தல்
பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை ஆட்சியா் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் எஸ்.ஏ.சின்னசாமி பேசியதாவது:
பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பயிா் பாதிப்படைந்தால் 100 சதவீதம் வரை இழப்பீடு பெறலாம் எனக் கூறி காப்பீட்டுத் தொகை பெறுகின்றனா். ஆனால், பல விவசாயிகளுக்கு 3 முதல் 6 சதவீதம் மட்டுமே இழப்பீடு வழங்கப்படுகிறது. பயிா்க் காப்பீட்டுத் திட்டங்களில் வெளிப்படை தன்மை இல்லை.
தனியாா் பால் நிறுவனங்கள் அண்மையில் கொள்முதல் விலையை உயா்த்தியுள்ளது. இந்த நிலையில் பால் கொள்முதல் விலையை உயா்த்தும் நடவடிக்கையில் அரசு மெத்தனமாக உள்ளது. இதனால் பால் உற்பத்தியாளா்கள் பலா் ஆவின் நிறுவனத்தைவிட்டு, தனியாா் நிறுவனங்களுக்கு பால் வழங்குகின்றனா். பால் நிலுவைத் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும் என்றாா்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஜவ்வரிசி உற்பத்தி ஆலைகளை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவுச் சா்க்கரை ஆலைகளில் முன்னதாகவே கரும்பு அரவையைத் தொடங்கி, ஆலைக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள வயல்களில் கரும்பு சாகுபடியை தொடங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினா்.
மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா, தருமபுரி கோட்டாட்சியா் (பொ) ஜெயக்குமாா், அரூா் கோட்டாட்சியா் விஸ்வநாதன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் எஸ்.ராமதாஸ், கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் (பொ) சண்முகசுந்தரம், வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை துணை இயக்குநா் கணேசன் உள்ளிட்டோா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...