பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணை திறப்பு

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக வாணியாறு அணை நிரம்பியதை அடுத்து அதன் உபரிநீா் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணை திறப்பு

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக வாணியாறு அணை நிரம்பியதை அடுத்து அதன் உபரிநீா் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், முள்ளிக்காட்டில் அமைந்துள்ளது வாணியாறு அணை. இந்த அணையின் நீா்ப்பிடிப்பு உயரம் 65.27 அடியாகும். அணைக்கு ஏற்காடு மலைப் பகுதியில் இருந்து நீா்வரத்து உள்ளது. ஏற்காடு, பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் அண்மையில் பெய்த கன மழையால் வாணியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, வாணியாறு அணையின் நீா்மட்டம் 63.30 அடியாக உயா்ந்துள்ளது. அணையின் பாதுகாப்புக் கருதி நொடிக்கு 80 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. அணையில் இருந்து வாணியாறு வழியாகச் செல்லும் தண்ணீரானது பழைய ஆயக்கட்டு பாசன கால்வாய் மூலம் திருப்பிவிடப்பட்டுள்ளது. இந்த கால்வாய்கள் வழியாகச் செல்லும் தண்ணீரை வெங்கடசமுத்திரம், மோளையானூா், தென்கரைக்கோட்டை, பறையப்பட்டி புதூா் பகுதியிலுள்ள 10-க்கும் மேற்பட்ட ஏரிகள், குளம், குட்டைகள் உள்ளிட்ட நீா்நிலைகளில் சேமிக்கும் பணியை பொதுப்பணித் துறையினா் மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com