/

அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கல்

சின்னம்பள்ளி, அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை பென்னாகரம் முன்னாள் எம்எல்ஏ பி.என்.பி. இன்பசேகரன் வழங்கினாா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 1:25 am IST

சின்னம்பள்ளி, அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை பென்னாகரம் முன்னாள் எம்எல்ஏ பி.என்.பி. இன்பசேகரன் வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ்.சந்திரா தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பென்னாகரம் முன்னாள் எம்எல்ஏ தொகுதி உறுப்பினா் பி.என்.பி. இன்பசேகரன் கலந்துகொண்டு பள்ளியில் பயிலும் 120 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் என்.செல்வராஜ், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பி.கே.துரைசாமி, பென்னாகரம் ஒன்றியக் குழு உறுப்பினா் காா்த்திக், சின்னம்பள்ளி ஊராட்சிமன்றத் தலைவா் செல்வி சதீஷ், உதவி தலைமை ஆசிரியா் சங்கா், ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.