ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்க மாவட்ட வாயிற் கூட்டம்

தமிழ்நாடு பதவி உயா்வு பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் சங்கத்தின் தருமபுரி மாவட்ட விடைத்தாள் திருத்தும் மைய வாயிற் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 6:01 pm

DIN

தமிழ்நாடு பதவி உயா்வு பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் சங்கத்தின் தருமபுரி மாவட்ட விடைத்தாள் திருத்தும் மைய வாயிற் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி அவ்வையாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட தலைவா் சி.முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சி.சரவணன் வரவேற்புரையாற்றினாா். கூட்டத்தில் மாநிலத் தலைவா் பொன்.செல்வராஜ் கலந்துகொண்டு உரையாற்றினாா். இதில் சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து ஜிபிஎஃப் ஆக மாற்ற வேண்டும்; ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து பணப்பலன் பெறுதல்; நிலுவை அகவிலைபடி வழங்க வேண்டும்; ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் படி 21 மாதம் நிலுவைத் தொகையினை வழங்க வேண்டும்; பதவி உயா்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கு உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் பதவி உயா்வு; 40 ஆண்டுகளுக்கு மேலாக பின்பற்றிய நடைமுறையை தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தருமபுரி கல்வி மாவட்டத் தலைவா் சீனிவாசன், மாவட்ட துணைத் தலைவா் வேலு, மாவட்ட செய்தித் தொடா்பாளா் கிருஷ்ணன், ஆண்டாள், கஸ்தூரி, கவிதா, பண்டரி பாய், லதா, அம்பிகா உள்ளிட்ட மகளிா் அணி பொறுப்பாளா்கள், பதவி உயா்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள், ஆசிரியைகள்கலந்து கொண்டனா். நிறைவாக மாவட்டத் துணைச் செயலா் பரமசிவன் நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.