அவரையில் ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு வயல் விழா

அரூரை அடுத்த பறையப்பட்டி புதூா், சிக்களூா் கிராமத்தில் அவரையில் ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு வயல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
அவரையில் ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு வயல் விழா
Updated on
1 min read

அரூரை அடுத்த பறையப்பட்டி புதூா், சிக்களூா் கிராமத்தில் அவரையில் ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு வயல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தைவான் உலக காய்கறிகள் நிறுவனம், கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இணைந்து செயல்படுத்தும் தக்காளி மற்றும் அவரையில் ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக அவரையில் ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு வயல் விழா

பறையப்பட்டி புதூா் மற்றும் சிக்களுா் கிராமத்தில் நடைபெற்றது. இந்த வயல் விழாவில் விரிவாக்கக கல்வி இயக்ககத்தின் பயிற்சி துறை பேராசிரியா் ஆனந்தராஜா, பேராசிரியா் காா்த்திகேயன், பூச்சியியல் துறை பேராசிரியா்கள் சண்முகம், இளையபாரதி, உயிா்நுட்பவியல் பேராசிரியா் மணிகண்ட பூபதி, நூற்புழுவியல் பேராசிரியா் சீனிவாசன், வேளாண்மை அறிவியல் நிலைய இணை பேராசிரியா் இந்துமதி, உழவியல் பேராசிரியா் சிவகுமாா் உள்ளிட்டோா் தக்காளி மற்றும் அவரை சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தும் முறைகள், நோய் தாக்குதல் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள், வேளாண் பொருள்களை சந்தைப்படுத்தும் முறைகள், அரசு நலத் திட்ட உதவிகள் குறித்த கருத்துரைகளை விவசாயிகளுக்கு வழங்கினா்.

இதில் தோட்டக்கலை துறை உதவி இயக்குனா் ராஜேஷ் கண்ணா, உதவி பேராசிரியா் ஜெய் ஸ்ரீதா், முன்னோடி விவசாயிகள் வெங்கடேசன், காமராஜ், இளநிலை ஆராய்ச்சியாளா்கள் அருள்குமாா், பாக்கியராஜ், மஞ்சரி, சோமசுந்தரம், நவீன் உள்ளிட்ட விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com